ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து தானாக வந்த ரொக்கம், போலீசாரிடம் பணத்தை ஒப்படைத்த தந்தை மகன்

0 2461

ஓமலூரில் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் தானாக வெளிவந்திருந்த பணத்தை இளைஞர் ஒருவர் போலிசாரிடம் ஒப்படைத்தார்.

சேலம் மாவட்டம், கோட்டமேட்டுப்பட்டியை சேர்ந்த சச்சின் என்பவர் பணம் எடுப்பதற்காக பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம் சென்றுள்ளார். அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து 9 ஆயிரத்து 500ரூபாய் வெளியே வந்துள்ளது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த பணத்தை ஓமலூர் காவல் நிலையத்தில் தன்னுடைய தந்தை பாலசுப்ரமணியுடன் சென்று ஒப்படைத்தார். பணத்தை நேர்மையாக ஒப்படைத்த அந்த இளைஞருக்கு உதவி ஆய்வாளர் பாராட்டு தெரிவித்து அந்த பணம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றார்.

ஏற்கனவே இதேபோல் இவரது தந்தைக்கும் இதுபோன்றதொரு சம்பவம் நடந்ததாகவும் அவரும் போலிசாரிடம் பணத்தை ஒப்படைத்ததாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments