விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச் சென்ற 10 டாரஸ் லாரிகள் பறிமுதல் - அபராதம் விதிப்பு
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் விதிகளை மீறி கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்களை ஏற்றிக்கொண்டு சென்ற 10 டாரஸ் லாரிகளை போலீசார் பறிமுதல் செய்ததோடு, அபராதம் விதித்தனர்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு ஜல்லி, பாறைப்பொடி, எம்சாண்ட், கற்கள் உள்ளிட்ட கனிமவளங்கள் ஏற்றிக் கொண்டு, நாகர்கோவில் - களியக்காவிளை தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் லாரிகள், 20டன் வரையிலான பாரத்துடன் மட்டுமே செல்ல வேண்டும்.
ஆனால், விதிகளை மீறி 40முதல் 50டன் வரையில் அதிகளவு பாரத்தை ஏற்றிக் கொண்டு செல்லும் டாரஸ் லாரிகளால் சாலைகள் சேதமடைந்து, விபத்து நிகழ்வதாக, வாகன ஓட்டிகள் புகார் கூறி வந்த நிலையில், அதனை கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில், தக்கலையில் சோதனையில் ஈடுபட்ட தனிப்படை போலீசார், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக பாரத்துடன் வந்த 10 டாரஸ் லாரிகளை மடக்கி பிடித்து ஒவ்வொரு லாரிக்கும் 25-ஆயிரம் முதல் 30ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர்.
Comments