திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகன போக்குவரத்துக்கு தடையை அறியாமல் இரவு முழுக்க வரிசைக் கட்டி நின்ற வாகனங்கள்..

0 2463
தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அது தெரியாமல் அவ்வழியாக வந்த வாகனங்கள் இரவு முழுக்க வரிசை கட்டி நின்றன.

தமிழகம் - கர்நாடகத்தை இணைக்கும் ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பாதையில் இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், அது தெரியாமல் அவ்வழியாக வந்த வாகனங்கள் இரவு முழுக்க வரிசை கட்டி நின்றன.

வன விலங்குகளின் நடமாட்டம் காரணமாக திம்பம் மலைப்பாதையில், இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதனையறியாமல், அங்கு வந்த வாகனங்கள், பண்ணாரி சோதனைச் சாவடியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, காலை 6 மணிக்கு மேல் வழக்கம்போல் திம்பம் மலைப்பாதை வழியாக அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டது.

மேலும் அவ்வழியாக செல்ல கார், லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments