தமிழகத்தில் 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்

0 2028

வளிமண்டல சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இரு நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

சென்னையில் மழைக்கு வாய்ப்பில்லை

மன்னார் வளைகுடா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் கடலோரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

தென் தமிழகம், டெல்டா மற்றும் கடலூர், புதுக்கோட்டையில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்

நாளைய தினமும் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்

12-ந் தேதி மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, குமரியில் கனமழை பெய்யக்கூடும்

13-ந் தேதியில் இருந்து 15-ந் தேதி வரை தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், மழைக்கு வாய்ப்பில்லை

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments