கொலம்பியாவில் ராணுவத் தளத்தில் மோட்டார் சைக்கிள் வெடிகுண்டுத் தாக்குதல் - 2 வீரர்கள் உயிரிழப்பு

0 1683

கொலம்பியாவில் ராணுவ தளத்தில் மீது நடத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு தாக்குதலில் 2 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

ராணுவ தளத்திற்குள் உணவு டெலிவிரி செய்வது போல் மர்ம நார் நுழைய முயன்றதாகவும், வீரர்கள் தடுத்ததால் தளத்தின் முன் மர்ம நபர் வெடிகுண்டை வெடிக்கச் செய்ததாகவும் வீரர்கள் தெரிவித்தனர்.

தாக்குதலில் இரண்டு வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு உள்ளூர் கிளர்ச்சி படைகள் தான் காரணம் என அதிபர் இவான் டியூக் குற்றம்சாட்டி உள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments