வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லை - ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

0 4401

வான்வெளியில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக்கிரகவாசிகள் யாரும் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கலிபோர்னியாவில் உள்ள SETI அமைப்பின் ஆய்வாளர்கள், மேற்கு ஆஸ்திரேலிய பாலைவனத்தில் உள்ள முர்ச்சிசன் வைட்ஃபீல்ட் அரே என்ற உலகின் மிக உணர்திறன் வாய்ந்த ரேடியோ தொலைநோக்கி மூலம் வான்வெளியை ஆராய்ச்சி செய்தனர். 144 வெளிக் கோள்களையும், ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களையும் SETI ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்தனர்.

சுமார் 7 மணி நேரம் நடத்தப்பட்ட நீண்ட ஆராய்ச்சியின் போது, நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்களில் இருந்து எந்த அதிர்வெண்ணும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments