கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்த மத்திய அரசு திட்டம் எனத் தகவல்
கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் செலுத்த மத்தியஅரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால் அது விஞ்ஞானப் பூர்வமான தேவையை அனுசரித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. இது குறித்து நிதி ஆயோக்கின் சுகாதாரப்பிரிவு உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் செய்தியாளர்களிடம் பேசுகையில் தேவைக்கேற்பவே முதல் டோஸ் இரண்டாம் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக கூறினார்.
முதலில் விஞ்ஞானி ரீதியாக ஒப்புதல் கிடைக்க வேண்டும் அதன் பிறகே அதனை செயல்படுத்துவது உள்ளிட்ட இதரப் பிரச்சினைகள் பரிலீக்கப்படும் என்று அவர் கூறினார். உலக அளவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும் அதில் ஏற்படும் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் டாக்டர் வி.கே.பால் தெரிவித்துள்ளார்.
Comments