கர்நாடகாவில் 50ரூபாய் பந்துக்காக ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட கிராம மக்கள்

0 2822

கர்நாடகாவில் 50 ரூபாய் மதிப்புள்ள கிரிக்கெட் பந்து வாங்கியதில் ஏற்பட்ட தகராறில் கிராமத்தினர் இருதரப்பாக பிரிந்து மோதிக்கொண்டனர்.

கலபுர்கி மாவட்டத்தில் கோபுரா கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்று முடிந்த கிரிக்கெட் போட்டிகள் தொடர்பாக  வரவு செலவு குறித்து  இளைஞர்கள் விவாதித்தனர். அப்போது கிரிக்கெட் பந்து வாங்கியதற்கான தொகை யார் கணக்கில் சேர்ப்பது என்பது தொடர்பான விவாதம், கருத்து மோதலாகி, பின்னர் கைகலப்பானது.

இரு குழுக்களில் உள்ள இளைஞர்களுக்கு ஆதரவாக ஆண்கள், பெண்கள் என அவர்களின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து நடுரோட்டில் சரமாரியாக  கம்பு, கைகளால் தாக்கிக் கொண்டனர். 50 ரூபாய் பந்துக்காக ஒரு கிராமமே கலவரத்தில் ஈடுபட்ட காட்சிகள் வைரலாகி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments