சவுதி அரேபியாவில் ட்ரோன் மூலம் ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்த முயற்சி... 12 தொழிலாளர்கள் காயம்

0 2200

சவுதி அரேபிய விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 12 பேர் காயமடைந்தனர்.

ஏமன் எல்லைக்கு அருகில் உள்ள அபா விமான நிலையத்தின் மீது ஹவுதி போராளிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயன்றனர். இதையடுத்து வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் ட்ரோனை சவுதி அதிகாரிகள் சுட்டு வீழ்த்தினர்.

ஆனால் வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் விழுந்ததில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 தொழிலாளர்கள் காயமடைந்ததாக சவுதி அரசு தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments