காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்கள் நாட்டை இருட்டில் தள்ளியதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சனம்

0 1709

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்டதாக குற்றம் சாட்டிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நாட்டின் இருண்டகாலம் என்று விமர்சித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் உரை மீதான விவாதங்களுக்கு பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளுக்கு பாஜக அரசு செய்து வரும் நன்மைகளைப் பட்டியலிட்டார். முந்தைய காங்கிரஸ் தலைமையிலான அரசு உணவு பாதுகாப்பு கொள்கையின் உரிமைகளை விட்டுக் கொடுத்ததாக அவர் விமர்சித்தார்.

2013 ஆம் ஆண்டு உலக வர்த்தக அமைப்புடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டிருந்தால் 2017 முதல் விவசாயிகளிடமிருந்து ஒருபோதும் அரிசியை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என்பதை சுட்டிக் காட்டினார்.

நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு நிதி ஒதுக்குவது தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்த நிர்மலா சீதாராமன் தேவைக்கும் அதிகமான நிதியை அளித்து வருவதாகக் கூறினார்.

இந்தியாவின் ஒவ்வொரு கிராமமும் இருட்டில் இருந்து விடுபட்டு மின்சாரம் பெற்றுள்ளதாகவும் தமதுஉரையில் குறிப்பிட்ட அவர், காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்கள் நாட்டை இருட்டில் தள்ளியதாக விமர்சித்தார்.

இதையடுத்து காங்கிரஸ்,திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

விவாதத்தில் எழுப்பப்பட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் நிதியமைச்சர் பதில் அளித்து உள்ளார் என்றும், உண்மையை சந்திக்க தைரியமில்லாமல் எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் பகவத் காரட் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments