திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை

0 2449
திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை

விலங்குகளின் நலன் கருதி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அடுத்து திம்பம் மலைப்பாதையில் இரவு நேர வாகனப் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மாலை 6 முதல் காலை 6 மணி வரை வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்க ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்துமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதன் அடிப்படையில், தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பண்ணாரி சோதனைச் சாவடியில் மாலை 6 மணிக்கு 10 மற்றும் 12 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனங்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மேலும், இரவு 9 மணிக்கு மேல் எந்த ஒரு வாகனங்களும் செல்ல முடியாதபடி வனத்துறையினர் சாலையில் தடுப்பு அரண்கள் அமைத்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments