தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண்

0 3243

கர்நாடகாவில் தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததாக, கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை கூலிப்படை வைத்து தீர்த்துக்கட்டிய கொடூரப் பெண்ணை கைது செய்த போலீசார், கூலிப்படையை தேடி வருகின்றனர்.

கங்காராம் - லட்சுமி தம்பதிக்கு, மூன்று குழந்தைகள் இருந்தனர். ஒரு வாரத்திற்கு முன் லட்சுமியின் அண்ணன் மகனான சிறுவனும் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், திடீரென வீட்டுக்குள் புகுந்த கும்பல், அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. விசாரணையில், கங்காராமுக்கு மனைவியின் பெயர் கொண்ட லட்சுமி என்ற வேறொரு பெண்ணுடன் தகாத உறவு இருந்த நிலையில், விஷயம் தெரிந்து மனைவி கங்காராமை கண்டித்து சண்டையிட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு பிறகு கள்ளக்காதலியுடன் பேசுவதை கங்காராம் தவிர்த்து வந்த நிலையில், இதனை பொறுத்துக் கொள்ளமுடியாத அந்த பெண் கூலிப்படையை ஏவி கள்ளக்காதலனின் மனைவி, குழந்தைகளை ஒட்டு மொத்தமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments