வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு

0 2976
வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை காவல்துறையிடம் ஒப்படைத்த சிறுவனுக்கு பாராட்டு

விழுப்புரத்தில் வீட்டு வாசலில் கண்டெடுத்த செல்போன் மற்றும் 2,000 ரூபாய் பணத்தை ஒப்படைத்த 12 வயது சிறுவனை மாவட்ட எஸ்.பி பாராட்டினார்.

கொரோனாவால் தாய் தந்தையை இழந்த ஜீவா என்ற அந்த சிறுவன், வீட்டு வாசலில் கேட்பாரற்று கிடந்த பையைத் திறந்து பார்த்த போது, உள்ளே 15,000 ரூபாய் மதிப்பிலான செல்போன், 2000 ரூபாய் பணம் மற்றும் 3 ஏடிஎம் கார்டுகள் இருந்துள்ளன.

ஜீவா தனது பராமரிப்பாளருடன் எஸ்.பி அலுவலகம் சென்று விழுப்புரம் எஸ்.பி ஸ்ரீநாதாவிடம் பையை ஒப்படைத்தான். சிறுவனின் நேர்மையை பாராட்டி எஸ்.பி பரிசு வழங்கினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments