உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு-அமைச்சர் நிர்மலா சீதாராமன்

0 2335

உண்மையை எதிர்கொள்ள இயலாமல் காங்கிரஸ் எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்வதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விமர்சித்துள்ளார்.

மக்களவையில் பட்ஜெட் தொடர்பான விவாதத்தில் பேசிய நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் ஆட்சியில் மின் இணைப்பு இல்லாமல் இருண்ட காலம் அதிகமாக இருந்தது என்றார். ஆனால் தற்போது ஒவ்வொரு கிராமத்திலுள்ள வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், திமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி எம்பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இது குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், அவையில் அமர்ந்து இருப்பதற்கான பொறுமை கூட காங்கிரஸ்க்கு இல்லை என சாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments