லஞ்சம் பெற்றுக்கொண்டு 48 காலி மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக முன்னாள் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை மீறி லஞ்சம் பெற்றுக்கொண்டு 48 காலி மனைகளுக்கு அங்கீகாரம் வழங்கியதாக சென்னை சேலையூர் முன்னாள் சார்பதிவாளர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
திருப்போரூர் இணை சார்பதிவாளராக பணியாற்றிய செல்வசுந்தரி என்பவர் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ,10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், அவர் கடந்த 2015 முதல் 2017-ஆம் ஆண்டு வரை சேலையூர் சார் பதிவாளராக பணியாற்றிய போது, 48 காலி மனைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அங்கீகாரம் வழங்கியதாக தற்போது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இதனிடையே ,கடந்த 2 நாட்களில் மட்டும் லஞ்சம் வாங்கியதாக அடுத்தடுத்து 3 சார்பதிவாளர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Comments