காதலர் நாளையொட்டிப் பல்வேறு நாடுகளுக்கும் ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்வதால் உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி
காதலர் நாள் கொண்டாட்டத்துக்காகக் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து ரோஜா மலர்கள் ஏற்றுமதி செய்வதால், உரிய விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஓசூர் வட்டாரத்தில் இரண்டாயிரம் ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் ரோஜாச் செடிகள் வளர்க்கப்படுகின்றன. இங்கிருந்து பலவகை ரோஜா மலர்கள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதலர்நாள் ஆகியவற்றையொட்டி உலகின் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
உள்நாட்டில் திருமண விழாக்களுக்கு ஆர்டர்கள் குவிந்துள்ளதாலும், காதலர்நாளை முன்னிட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாலும் ரோஜாப் பூக்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
Comments