லக்கிம்புர் கேரி வன்முறை வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் மகனுக்கு ஜாமீன்

0 1366
மத்திய உள்துறை இணை அமைச்சர் மகனுக்கு ஜாமீன்

உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்புர் கேரி பகுதியில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுக்கு சுமார் 4 மாதங்களுக்குப் பின் அலகாபாத் உயர்நீதிமன்றததின் லக்னோ கிளை ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேளாண் மசோதாக்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது காரைக் கொண்டு மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் பாஜகவினர் 3 பேர் மற்றும் பத்திரிகையாளர் ஒருவர் என மேலும் 4 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உள்பட 10 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது ஆஷிஷ் மிஸ்ராவுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments