ஹிஜாப் விவகார வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு
கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் விவகாரம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனை குறித்த வழக்கின் விசாரணையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்த கர்நாடக உயர்நீதிமன்றம், தீர்ப்பு வரும் வரை மதத்தை அடையாளப்படுத்தும் உடைகளை மாணவர்கள் அணிந்து செல்ல தடை விதித்துள்ளது.
கர்நாடக கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து செல்ல அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, வன்முறை காரணமாக மூடப்பட்ட பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும் என அறிவுறுத்தியது.
மேலும், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காண தயாராக உள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள், வன்முறை நடைபெற்ற பகுதியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தினர்.
ஹிஜாப் அணிவது அடிப்படை உரிமைகளுக்கு கீழ் வருகிறதா என்பதையும் அது மத நடைமுறையில் இன்றியமையாததா? என்பதையும் பரிசீலிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
Comments