பிப்ரவரி 26ஆம் நாள் 6, 7, 8ம் வகுப்பு மாணவர்களுக்குப் புத்தகப் பை இல்லாத நாள் கடைப்பிடிப்பு
தமிழ்நாட்டில் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், பள்ளிகளுக்குப் புத்தகப் பை கொண்டு செல்லாத நாள் பிப்ரவரி 26 அன்று கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதன் முக்கிய நோக்கம் மாணவர்களின் மன அழுத்தத்தை நீக்குவதும், மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்தி உடல்நலம், மனவளத்தை மேம்படுத்துவதும் ஆகும். பள்ளிக்குப் புத்தகங்கள் எடுத்துச் செல்லாமல் அனுபவம் மூலம் வாழ்க்கைக் கல்வியைப் பெறுவதே இதன் நோக்கம் ஆகும்.
இதன்படி மாடித்தோட்டம், மூலிகைத் தாவர வளர்ப்பு, பாரம்பரியக் கலைகள் பற்றி மாணவர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட உள்ளது. புத்தகப் பை இல்லா நாளில் மாணவர்களுக்குச் சிற்றுண்டி, பரிசுப்பொருட்கள் வழங்க ஒரு கோடியே 26 இலட்ச ரூபாயைப் பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கியுள்ளது.
Comments