இந்திய பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றம்

0 4540

வங்கி வட்டி விகிதங்களில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் ஐந்நூறு புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

இன்றைய வணிக நேரத் தொடக்கத்தில் பங்குச்சந்தைகளில் பெரிய அளவில் ஏற்றம் இல்லாமல் இருந்தது. ரெப்போ விகிதம், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் ஆகியன மாற்றமின்றித் தொடரும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்தார்.

இதையடுத்துப் பங்குச்சந்தைகளில் வணிகம் ஏற்றமடைந்தது. வங்கிகளின் பங்குமதிப்பு இரண்டரை விழுக்காடு வரை உயர்ந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments