அதிவேக இணைய சேவைக்காக நிலைநிறுத்தப்பட்ட ஸ்டார் லிங்க் நிறுவனத்தின் 40 செயற்கைக்கோள்கள் மின் காந்தப் புயல் காரணமாக சேதம்
விண்வெளியில் ஏற்பட்ட மின் காந்தப் புயல் காரணமாக எலான் மஸ்கின் ஸ்டார் லிங்க் நிறுவனம் அதிவேக இணைய சேவைக்காக விண்ணில் நிலை நிறுத்திய 40 செயற்கைக்கோள்கள் சேதமடைந்தன.
சூரியனின் மேற்பரப்பில் இருந்து கரோனல் மாஸ் எஜெக்ஷன் என்ற ஒரு மாபெரும் உமிழ்வு வெளியேறி, பூமியின் வளிமண்டலத்துக்கு மிக அருகே புவி காந்த புயலாக உருவெடுத்தது. இந்நிலையில், கடந்த 3 ஆம் தேதி பூமிக்கு மிக அருகில் உள்ள புவி வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்ட 49 ஸ்டார் லிங்க் செயற்கோள்களில் 40 செயற்கோள்கள் புவி காந்த புயலால் ஏற்பட்ட மிகையான இழுவையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்தன.
இருப்பினும், இந்த செயற்கோள்கள் பூமியின் வளி மண்டலத்துக்குள் மீண்டும் நுழையும் எனவும், இவை மற்ற செயற்கைக்கோள்களுடன் மோத வாய்ப்பு இல்லை எனவும்,சேதமடைந்த செயற்கோள்களின் பாகங்கள் பூமியில் விழுந்து மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பும் இல்லை எனவும் ஸ்டார் லிங்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments