தவறான வழியில் வந்த பைக் மீது பேருந்து உரசியதால் ஆத்திரமடைந்து ஓட்டுநர் மீது தாக்குதல் நடத்திய பெண்ணின் வீடியோ வெளியீடு

0 4115

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில், போக்குவரத்து விதிகளை மீறி தவறான வழியில் வந்த பெண், தன் பைக் மீது லேசாக உரசிய அரசுப் பேருந்து ஓட்டுநரை, வார்த்தைகளால் வசைபாடி தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.

பென்ஸ் சர்க்கிள் பகுதியில் இருந்து விஜயவாடா நோக்கி அரசுப் பேருந்து ஒன்று பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. ஒரு வழிப்பாதையான அந்த சாலையில் போக்குவரத்து விதிகளை மீறி தவறான வழியில் பென்ஸ் சர்க்கிள் நோக்கி பைக்கில் வந்த பெண் மீது, அந்த அரசுப் பேருந்து லேசாக உரசியது. இதனால், ஆத்திரமடைந்த அந்த பெண் பேருந்தில் ஏறி ஓட்டுநரை வார்த்தைகளால் வசைபாடினார்.

பின்னர், ஓட்டுநரின் சட்டையை பிடித்து இழுத்து தாக்கி ரகளையில் ஈடுபட்டார். சக பயணிகள் சொல்லியும் கேட்காத அந்த பெண், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தும் கூட பிரச்சனையை முடிக்காமல் குரலை உயர்த்தி, ஓட்டுநரை கீழே இறங்குமாறு கத்தினார்.

பின்னர், ஒருவழியாக பெண்ணை சமாதானம் செய்த போலீசார், ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments