வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு வரும் சர்வதேச விமானப் பயணிகளுக்கு, மத்திய அரசு தளர்வுகள் அறிவிப்பு
பன்னாட்டு விமானப் பயணிகளுக்கான திருத்தப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மத்திய நலவாழ்வு அமைச்சகம், பிப்ரவரி 14 முதல் நடைமுறைக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
அதன்படி ஒமைக்ரான் தொற்றுப் பரவல் அச்சுறுத்தல் உள்ள நாடுகள், மற்ற நாடுகள் எனப் பயணிகளிடையே இருந்த வேறுபாடு நீக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு 7 நாள் கட்டாயம் வீட்டுத் தனிமை என்கிற கட்டுப்பாடு நீக்கப்பட்டு, 14 நாட்கள் தன் கண்காணிப்புக்குப் பரிந்துரைத்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்துக்குள் எடுத்த கொரோனா சோதனைச் சான்று அல்லது தடுப்பூசி போட்ட சான்றிதழை ஏர் சுவிதா தளத்தில் பதிவேற்ற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.
விமான நிலையத்தில் வந்து இறங்கியபின் அறிகுறி உள்ளவர்களை மட்டும் தனிமைப்படுத்திக் கொரோனா சோதனை செய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
Comments