பள்ளிக்கு சென்றிருந்த சிறுவன் திடீரென உயிரிழப்பு.! பெற்றோருக்கு ஆறுதல் கூறி 3லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர்

0 3087

புதுக்கோட்டையில் பள்ளிக்கு சென்ற 4ஆம் வகுப்பு மாணவன் திடீரென மயங்கி விழுந்து மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மாணவனின் குடும்பத்திற்கு மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்த 9 வயதான நிதிஷ்குமார் என்ற அந்த மாணவன்,  பள்ளிக்கு சென்றிருந்த நிலையில், திடீரென மயங்கி விழுந்திருக்கிறான். அவனை ஆசுவாசப்படுத்திய ஆசிரியர்கள், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மயக்கம் தெளிந்த பின்னர் வீட்டில் இறக்கிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

உடல்நிலை மோசமடைந்த அந்த சிறுவனை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்துவிட்டான். இந்த நிலையில், மாணவனின் குடும்பத்தினருக்கு  ஆறுதல் கூறியுள்ள முதலமைச்சர், 3லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments