பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு விவகாரம் - போலீசார் அறிக்கை

0 2169

சென்னையில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் ரவுடி ஒருவன் கைது செய்யப்பட்ட நிலையில், அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழக பா.ஜ.க. தலைமை அலுவலகத்திற்கு நள்ளிரவில் பைக்கில் வந்த நபர், நுழைவுவாயிலில் மூன்று பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு சென்ற நிலையில், அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. தகவல் அறிந்து போலீசார் நேரில் வந்து விசாரித்த போது, சிசிடிவி காட்சிகள் மூலம், பைக்கில் வந்த நபர், நந்தனத்தைச் சேர்ந்த ரவுடி கருக்கா வினோத் என்பதை கண்டுபிடித்தனர்.

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவனை கைது செய்தனர். விசாரணையில், நீட் தேர்வுக்கு ஆதரவாக பா.ஜ.க. பேசியதால் தான் பெட்ரோல் குண்டு வீசியதாகவும், மத ரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ அந்த நபர் குற்றச்சம்பவத்தில் ஈடுபடவில்லை எனவும் தெரியவந்துள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments