கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும்... அமெரிக்கா எச்சரிக்கை
கனடாவில் லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தினால் பொருளாதார பாதிப்பு ஏற்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவர்களுக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயம் என்கிற அரசின் உத்தரவை எதிர்த்து, ட்ரக் ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் ஒட்டாவாவில் தொடங்கிய போராட்டம் தற்போது பல்வேறு பகுதிகளுக்கும் பரவி உள்ளது.
விவசாயப் பொருட்களுக்கான விநியோகப் பாதையான அம்பாசிடர் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அமெரிக்கா, கனடா இடையே கார் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள இரு நாட்டு எல்லையும் மூடப்பட்டுள்ளது.
Comments