உலக மக்கள் தொகையில் பாதி பேர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டனர் - சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர்

0 2115

உலக மக்கள் தொகையில் பாதி பேர் கொரோனாவுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக உணவு, மற்றும் சுகாதார பாதுகாப்பிற்கான ஐரோப்பிய கமிஷனர் Stella Kyriakides தெரிவித்துள்ளார்.

பிரான்சில் நடந்த உலக சுகாதாரத் துறையினர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், உலகளாவிய தடுப்பூசி பிரசாரத்தை அதிகரிக்க கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஐரோப்பாவில் 1 புள்ளி 7 பில்லியன் தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, ஏறத்தாழ 165 நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மற்ற நாடுகளை விட ஆப்பிரிக்காவில் தடுப்பூசி செல்த்திக் கொள்வோரின் எண்ணிக்கை குறைந்தளவில் உள்ளதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments