உத்தரப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
உத்தரப்பிரதேச மாநிலத்தின் 58 தொகுதிகளுக்கு இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் துணை ராணுவ படையின் 412 கம்பெனியை சேர்ந்த 50 ஆயிரம் வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சுமார் இரண்டு கோடியே 28 லட்சம் வாக்காளர்கள் இன்றைய தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். இன்றையத் தேர்தலில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையை சேர்ந்த 9 அமைச்சர்களின் அரசியல் எதிர்காலம் முடிவு செய்யப்படும்.
623 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். கடந்த முறை மக்களவைத் தேர்தலில் இந்த 58 தொகுதிகளில் பாஜக 53 தொகுதிகளைக் கைப்பற்றியது.
ஆதார் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 வகை ஆவணங்களைக் காட்டி வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments