பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து அச்சுறுத்தல்கள் அதிகரிப்பு... ஐ.நா.பாதுகாப்பு சபையில் இந்தியப் பிரதிநிதி விமர்சனம்
ஆப்கானிஸ்தான் அரசியல் நிலை மாற்றம் காரணமாக அண்டை நாடான பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு தீவிரவாத அச்சுறுத்தல்கள் அதிகமாகி இருப்பதாக ஐநா. பாதுகாப்பு சபையில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
அல்கொய்தா, ஐ.எஸ். போன்ற தீவிரவாத இயக்கங்களுடன் நெருங்கிய உறவு கொண்ட ஹக்கானி தீவிரவாத இயக்கம் குறித்து இந்தியா தொடர்ந்து கவலையை வெளிப்படுத்தி வருவதாக, இந்தியாவுக்கான நிரந்தரப் பிரதிநிதியான திருமூர்த்தி தமது உரையில் குறிப்பிட்டார். அல்கொய்தா உள்ளிட்ட தீவிரவாத இயக்கங்களுக்கான பாதுகாப்பான நாடாக ஆப்கான் மாறிவிட்டதாக அவர் தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளை சிறையில் இருந்து தாலிபன்கள் விடுதலை செய்திருப்பது சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
Comments