2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமில்லை - மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா

0 1449

இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயமில்லை என மேகாலயா முதலமைச்சர் கன்ராட் சங்மா தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் கன்ராட் சங்மா, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்தார்.

2 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு மேகாலயா வருபவர்களுக்கு நாளை முதல் ஆர்.டி.பி.சி.ஆர். சோதனை கட்டாயமில்லை என்றார். வரும் 14ஆம் தேதி முதல் சில்லாங் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் உள்ள 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments