பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியல்

0 2246
பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவம் ; ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் சாலை மறியல்

புதுக்கோட்டை அருகே பள்ளி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியர்கள் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறி, பெற்றோர் மற்றும் உறவினர் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பாப்பான் விடுதி அரசுப் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்த மாணவர் ஒருவர், செவ்வாய்கிழமை மதியம் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், பெற்றோர் இல்லாத நேரம் வீட்டில் கொண்டு வந்து ஆசிரியர்கள் விட்டுச் சென்றனர் என்று கூறப்படும் நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

ஆசிரியர்களின் அலட்சியமான செயல்பாடே காரணம் எனக் கூறி, சாலை மறியலில் ஈடுபட்ட உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், அதிகாரிகளுடன் அமைச்சர் மெய்யநாதன் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments