சவாரிக்குச் சென்ற கால்டாக்சி ஓட்டுநர் கொடூரமாகக் கொலை..

0 2531
கோவையில் சவாரிக்குச் சென்ற கால்டாக்சி ஓட்டுநர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

கோவையில் சவாரிக்குச் சென்ற கால்டாக்சி ஓட்டுநர் கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வடவள்ளி ஓணம்பாளையம்  தனியார் விடுதி அருகே உடலில் காயங்களுடன் அடையாளம் தெரியாத ஆண் சடலாக கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

விசாரணையில் அவர் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த சனு என்பதும், ரெட் டாக்ஸி நிறுவனத்தில் ஓட்டுநராக பணி புரிந்து வந்ததும் தெரியவந்தது.

செவ்வாய்கிழமை இரவு ஓணம்பாளையம்  தனியார் விடுதியிலிருந்து சவாரிக்கு அழைப்பு வந்தது என்றும் சனு அங்கு சென்ற பின்பு செல்போன், ஜி.பி.எஸ். இணைப்பு துண்டிக்கப்பட்டதாகவும் சக ஓட்டுநர்கள்  தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments