ஆட்டோவில் நகைப்பையை தவற விட்ட தம்பதியர்... நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநருக்கு பாராட்டு
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தம்பதியர் ஆட்டோவில் தவறவிட்டுச்சென்ற நகைப்பையை நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்த ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்று ஹஷாம் நகரில் இருந்து டோலிசௌக் பகுதிக்கு ஆட்டோவில் திரும்பிய மிர்சா சுல்தான் பெய்க் - சமீரா பேகம் தம்பதியினர் சுமார் 5 லட்சம் மதிப்புடைய நகைகள் அடங்கிய பையை ஆட்டோவிலேயே விட்டுவிட்டு இறங்கியுள்ளனர்.
பின்னர் இது தொடர்பாக அவர்கள் லங்கார் ஹவுஸ் போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து அவர்களது நகைப்பையை மீட்கும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தனர்.
அந்த சமயத்தில் மாலை 3 மணியளவில் ஆட்டோவின் டிரைவர் போலீசாரை தொடர்பு கொண்டு தனது ஆட்டோவில் பயணித்த தம்பதிகள் நகைப்பையை விட்டுச்சென்றுவிட்டதாக கூறி பின்னர் அதனை ஒப்படைத்துள்ளார். பின்னர் அதனை போலீசார் தம்பதியரிடம் முறைப்படி ஒப்படைத்தனர்.
Comments