பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல்
சார்ஜாவில் இருந்து திருச்சிக்கு, உள்ளாடையிலும், மலக்குடலிலும் பேஸ்ட் வடிவில் மறைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 82 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்கத்தை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்த போது, ஒரு ஆண் பயணி உள்ளாடையில் மறைத்து வைத்தும், மற்றொரு ஆண் பயணி மலக்குடலில் மறைத்து வைத்தும் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து மொத்தமாக 1,652 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து இருவரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments