எல்லையில் நேட்டோ படைகளை வலுப்படுத்த, கிழக்கு ஐரோப்பா நடவடிக்கை
உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்திருப்பதன் எதிரொலியாக கிழக்கு ஐரோப்பாவில் நிறுத்தப்பட்டிருக்கும் நேட்டோ படைகளை வலுப்படுத்தும் வகையில் கூடுதல் அமெரிக்க படைகள் ருமேனியா வந்தடைந்திருப்பதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் வசில் டன்கு தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன் உத்தரவின் பேரில் அமெரிக்கா மேலும் 3 ஆயிரம் படை வீரர்களை போலந்து மற்றும் ருமேனியா நாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்நிலையில் ஜெர்மனியின் வில்செக் பகுதியில் இருந்து ருமேனியாவிற்கு கிட்டத்தட்ட ஆயிரம் பீரங்கிப்படைக் குழுவினரை இடம் மாற்றியிருப்பதாக அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
இதேபோல் ருமேனியாவிற்கு தங்கள் நாட்டு படையினரை அனுப்பி வைக்க இருப்பதாக பிரான்ஸ் அரசு தெரிவித்துள்ளது.
Comments