தலை துண்டித்து பெயிண்டர் கொடூர கொலை ; மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம்

0 2295
தலை துண்டித்து பெயிண்டர் கொடூர கொலை

ஓசூர் அருகே தலை துண்டித்த நிலையில் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரை கொடூரமாக கொலை செய்து தலையை ஒரு கோயில் முன்பு வைத்து சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கொலை செய்யயப்பட்டவர் எழுவபள்ளி கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பிரதீப் என்ற பெயிண்டிங் தொழில் செய்து வந்தவர் என தெரியவந்துள்ளது. சொத்து பிரச்சனை காரணமாக கொலை நடந்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எழுவப்பள்ளி கிராமத்திலுள்ள மாரியம்மன் கோயில் முன்பு பிரதீப்பின் தலை தனியாக கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments