செல்போன் கடையின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு

0 969

தூத்துக்குடியில், செல்போன் கடையின் பூட்டை உடைத்து மர்ம நபர், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நவீன் ராஜ் என்பவர் நேற்றிரவு தனது செல்போன் கடையை அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில், காலையில் வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு செல்போன்கள் திருட்டு போனது தெரியவந்தது.

அவர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில், கடந்த 2 நாட்களாக பிச்சைக்காரன் போல அப்பகுதியில் சுற்றித் திரிந்த நபர் நள்ளிரவில் கையில் கட்டைப்பையை தூக்கிக் கொண்டு சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

அந்த நபர் செல்போன் கடையில் கைவரிசையை காட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments