சீனா பெய்ஸ் நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா - முழு ஊரடங்கு அமல்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த, சீனாவின் பெய்ஸ் நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு பொது போக்குவரத்து சேவை துண்டிக்கப்பட்டு, கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. உணவகங்களில் பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சீனா பூஜ்ஜிய கோவிட் அணுகுமுறையை பின்பற்றி வரும் நிலையில், நேற்றைய தினம் பெய்ஸ் நகரில் புதிதாக 135 பேருக்கு கொரோனா உறுதியானதால் சுமார் 42 லட்சம் மக்கள் வசிக்கும் அந்நகரில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அங்கு சீன புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பிறகு பாதிப்புகள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
Comments