கொரோனா சிகிச்சைக்கு மூக்கின் வழியே செலுத்தும் மருந்து அறிமுகம்

0 2622

இந்தியாவில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்கு பேபிஸ்பிரே என்னும் பெயரிலான மூக்கின் வழியாகச் செலுத்தும் மருந்தை கிளென்மார்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நைட்ரிக் ஆக்சைடை உட்பொருளாகக் கொண்ட இந்த மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூக்கின் வழியாகச் செலுத்தலாம். கனடாவைச் சேர்ந்த சனோட்டைஸ் நிறுவனத்திடம் இருந்து பேபிஸ்பிரே மருந்தை இறக்குமதி செய்யவும், விற்கவும் அனுமதி கோரிக் கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலேயே கிளென்மார்க் நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

அனுமதி கிடைத்ததையடுத்து இந்தியாவில் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மருந்தை இந்தியாவில் தயாரிக்கவும் விற்கவும் கிளென்மார்க் நிறுவனத்துக்குத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டாளர் அனுமதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments