நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தமிழக அரசு மீண்டும் அனுப்பியுள்ள நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்ப வாய்ப்பில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டி கிங்ஸ் மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், 2ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதோர், 70சதவீத அளவுக்கு இறப்பை சந்திக்க நேரிடுகிறது எனவும், தற்போதைய நிலையில் ஒருகோடியே 10 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தாமல் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.
குருதிசார் ஆய்வு முடிவில், தடுப்பூசி செலுத்தியோருக்கு 90சதவீதம் அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது கணடுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
Comments