சூர்யா நடித்த ஜெய்பீம் படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியது

0 6777

94 வது ஆஸ்கர் விருதுகளின் பரிந்துரைகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ்ப்படமான ஜெய்பீம் இடம்பெறவில்லை. மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படமும் ஆஸ்கர் விருதுக்கு தகுதிப் படங்கள் பட்டியலில் இடம்பிடித்திருந்த நிலையில், இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெறவில்லை.

ஆயினும் ஆவணப்பட பிரிவில் இந்தியாவை சேர்ந்த இயக்குனர்கள் ரின்டு தாமஸ், சுஷ்மித் கோஷ் இயக்கிய Writing with Fire என்ற ஆவணப்படம் பரிந்துரை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

இறுதிப் பரிந்துரைப் பட்டியலுக்கு 'Belfast', 'CODA', 'Don’t Look Up', 'Drive My Car', Dune', 'King Richard', 'Licorice Pizza', 'Nightmare Alley', 'The Power of the Dog', 'West Side Story' ஆகிய 10 படங்கள் இடம் பெற்றுள்ளன.

 மார்ச் 27 ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் வெற்றி பெற்றவர்கள் பெயர்கள் படங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments