மாணவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள்.. ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார் ரோஜா

0 2428

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்பாட புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் கழகம் இலவசமாக வழங்க உள்ளது.

முன்னதாக நகரி சட்ட மன்ற உறுப்பினர் ரோஜா தமிழக முதல்வரை சந்தித்து சித்தூர் மாவட்டத்தில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்களுக்கு, தமிழ்மொழி பாடதிட்டத்திற்காக 10,000 புத்தகங்கள் இலவசமாக வழங்க கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனையேற்று ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான ஆண்டுத்தமிழ் பாட நூல்கள் வகுப்பிற்கு தலா 1000 பிரதிகள் வீதம் இலவசமாய் வழங்க தமிழ்நாடு பாடநூல் கழகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ரோஜா வெளியிட்ட அறிக்கையில் ஆந்திரா வாழ் தமிழர்கள் சார்பாக முதல்வருக்கு நன்றிகள் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments