திருவண்ணாமலையில் பள்ளிச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.!

0 1928

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே பள்ளிச் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தாங்கல் கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காளியப்பன், தன்னிடம் பயிலும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

மாணவிகள் பெற்றோரிடம் அதுகுறித்து தெரிவித்த நிலையில், பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், பெற்றோரை சமாதானம் செய்து, காளியப்பனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments