மதுரையில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி.. அரசு செவிலியர் மற்றும் அவரது கணவர் மீது வழக்குப்பதிவு.!
மதுரை செக்காணூரணியில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று மோசடி செய்த அரசு செவிலியர் மீதும் அவரது கணவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
செக்காணூரணியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என்ற பெண் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 2019ஆம் ஆண்டு, அன்றைய அமைச்சர்கள், அதிகாரிகள் பலரைத் தெரியும் என்று கூறி, பாண்டியம்மாளும் அவரது கணவர் கணபதியும் அதே பகுதியைச் சேர்ந்த பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக தலா 5 லட்ச ரூபாய் வரை பணம் வாங்கியுள்ளனர்.
2 ஆண்டுகள் கடந்தும் வேலையும் வாங்கித் தராமல் பணத்தையும் தராமல் இழுத்தடித்த தம்பதி, நெருக்கடி கொடுத்தவர்களுக்கு மட்டும் போலியாக பணி ஆணை தயார் செய்து, கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் தம்பதி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Comments