சத்தீஸ்கரில் நக்சலைட்கள் வெடிகுண்டு தாக்குதல் - 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம்

0 1300

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூரில் நக்சலைட்கள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில், ரோந்து பணியில் ஈட்டுபட்ட 4 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

மொடக்பல் பகுதியில் ரோந்து சென்ற சி.ஆர்.பி.எப். வீரர்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளது.

தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். உள்ளூர் மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் ராய்ப்பூருக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments