கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு ரத்து.!
கேரளாவில் பெருந்தொற்று குறைந்து வருவதையடுத்து ஞாயிற்றுக் கிழமைகளில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கேரள அரசின் உயர்மட்டக் கூட்டம் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் ஞாயிற்றுக் கிழமைகளில் அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கு விலக்கிக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வரும் 28ம் தேதி பள்ளி, கல்லூரிகள் முழுமையாகச் செயல்படும் என்றும் அதுவரை 50 விழுக்காடு மாணாக்கர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலுவா சிவராத்திரி, மாரமன் மாநாடு, புகழ்பெற்ற ஆற்றின்கல் பொங்காலை விழாவை நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Comments