உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் இடங்களில் மது விற்க தடை - தமிழக அரசு
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள இடங்களில் மதுபானங்களை விற்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், வாக்குப்பதிவு நடைபெற உள்ள இடங்களில் பிப்ரவரி 17ஆம் தேதி காலை 10 மணி முதல் 19ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை மதுபானக்கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான வரும் 22ஆம் தேதியன்று வாக்கு எண்ணும் பகுதியிலும் மதுபானம் விற்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள இடங்களில் மதுபானங்கள் விற்கவும், மதுவை அப்பகுதிகளுக்கு எடுத்து செல்லவும் தடை விதிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments