அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்கள் கண்டெடுப்பு

0 1853

அருணாச்சல பிரதேசத்தில் பனிச்சரிவில் சிக்கிய ராணுவ வீரர்கள் 7 பேரின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

அம்மாநிலத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மிக உயர்ந்த மலைப்பகுதியான காமெங் செக்டர் (Kameng sector) பகுதியில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஏற்பட்ட கடும் பனிச்சரிவில் 7 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இந்நிலையில் வீரர்களை தேடும் பணி முழுவீச்சில் நடைபெற்று வந்ததை தொடர்ந்து, அவர்கள் அனைவரும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments