2008 அகமதாபாத் குண்டுவெடிப்பு வழக்கு : 49 பேர் குற்றவாளிகளாக அறிவிப்பு

0 2220

கமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2008 ஆம் ஆண்டு குஜராத்தின் முக்கிய நகரமான அகமதாபாத்தில் அடுத்தடுத்து  21 குண்டுகள் வெடித்த தொடர் தாக்குதலில் 56 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த வழக்கில் இந்தியன் முஜாஹிதீன் என்று சொல்லக்கூடிய ஐ.எம்.தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 77 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. வழக்கின் விசாரணை கடந்த செப்டம்பர் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று முடிந்த நிலையில், தீர்ப்பு செவ்வாய்க்கிழமை வெளியாகியுள்ளது.

49 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நிலையில், மற்ற 28 பேர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகளுக்கு தண்டனையை முடிவு செய்வதற்கான விசாரணை புதன்கிழமை முதல் தொடங்கும் என சிறப்பு நீதிமன்றம் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments