கான்ஸ்டபிள் தகுதி தேர்வில் முறைகேடு : உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக ஆடை அணிந்து வந்த பெண்
புதுச்சேரி காவல் துறையின் பெண் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான உடல் தகுதி தேர்வில், உடல் எடையை அதிகமாக காட்ட அடுக்கடுக்காக 4 பேண்ட் அணிந்து வந்து எடையை அதிகரிக்க முறைகேட்டில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் தகுதி நீக்கம் செய்து எச்சரித்து அனுப்பினர்.
உடற்தகுதி தேர்வில் பங்கேற்ற ஒரு பெண் உடல் மெலிந்து இருந்தார். ஆனால், காவலர் உடல் தகுதிக்கு தேவையான 45 கிலோ எடை இருந்தார். போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
பணியில் இருந்து பெண் காவலர்கள், தனி அறைக்கு அழைத்து சென்று அப்பெண்ணை சோதனை செய்தனர். அப்பெண், ஆடை மேல் ஆடையாக அணிந்திருந்த பேண்ட்களை ஒவ்வொன்றாக கழற்றினார்.
ஒரு ஜீன்ஸ் பேண்ட், அதன் மீது 3 லோயர் பேண்ட்கள் அணிந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில், 43 கிலோ எடை கொண்ட அப்பெண், உடற்தகுதி தேர்வுக்கு தேவையான 45 கிலோ எடையை அதிகரித்து காட்டுவதற்காக 4 பேண்ட்கள் அணிந்து வந்தது தெரிந்தது.
கழற்றப்பட்ட பேண்ட்கள் 2.2 கிலோ எடை இருந்தது என போலீசார் தெரிவித்தனர். முறைகேட்டில் ஈடுபட்ட அப்பெண்ணை தகுதி நீக்கம் செய்து, போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
Comments